தமிழில் விக்ரம் பிரபுவுடன் இது என்ன மாயம் திரைப்படத்தில் அறிமுகமாகினார் நடிகை கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் ரெமோ, ரஜனி முருகன் போன்ற படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார்.
இதையடுத்து நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை வைத்து உருவான திரைப்படம் நடிகையர் திலகம், இப்படத்தில் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்தார்.இதற்காக தேசிய விருதையும் பெற்றார். இதைத்தொடர்ந்து ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் முன்னணி நடிகையாக வலம்வருகின்றார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சாணி காயிதம் ஓடிடி-யில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.ஆனால், தெலுங்கில் வெளிவந்த சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் சில மோசமான விமர்சனங்களை சந்தித்துள்ளது
எனினும் தற்போது கீர்த்தியின் கைவசம் மாமன்னன், போலோ ஷங்கர், வாஷி, தசரா என பல படங்கள் உள்ளன.
இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் " என்னுடைய நடிப்பு எப்போதுமே எனக்கு முழு திருப்தி தருவதில்லை. எப்போதும் இன்னும் நன்றாக நடிக்க வேண்டும் என்று தான் நினைத்துக்கொள்வேன். அதே போல், நான் நடிக்கும் படங்கள் நஷ்டங்களை சந்திக்க கூடாது என்பதிலும் கவனமாக இருப்பேன் ".
அத்தோடு , " பெரும்பாலும் நான் நடிக்கும் படங்களை நானே பார்க்க மாட்டேன். ஏனென்றால், அப்படி பார்க்கும் பொழுது என்னுடைய தவறு எனது கண்களுக்கு தெரியும். அதனால், இன்னும் நன்றாக நடிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றும் " என தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
தான் நடித்த படங்களை தானே பெரும்பாலும் பார்ப்பதில்லை என்று கூறி, தன்னுடைய ரசிகர்களுக்கு சிறுது ஷாக் கொடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
பிற செய்திகள்:
- மறுபடியும் ரசிகர்களிடம் சிக்கி தவிக்கும் அட்லீ-ஆதாரத்துடன் வெளியான விபரம்….!
- 40 வயதில் திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வரும் பார்த்திபனின் மாஜி மனைவி; என்ன கூறியுள்ளார் தெரியுமா..?
- நயன்தாராவின் திருமணத்தை படமாக இயக்கவுள்ள இயக்குநர் கௌதம் மேனன்- இது என்ன புது டுவிஸ்டாக இருக்கு
- தளபதியின் மார்க்கெட்டை முறியடித்த கமல் ஹாசன்- கடந்த காலங்களில் நடக்காத வசூல் சாதனை
- ‘அவரை கட்டிப்பிடித்த போது தலைல இருந்து கால் வரைக்கும் ஒரு நல்ல பீலிங் உருவாச்சு’- விஜய்யின் தாயார் உருக்கம்
- பாடகர் கே.கே யின் மரணத்துக்கான காரணம் பற்றி மருத்துவர்கள் வெளியிட்ட அறிக்கை
- 40 வயதில் திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வரும் பார்த்திபனின் மாஜி மனைவி; என்ன கூறியுள்ளார் தெரியுமா..?
- நயன்தாராவின் திருமணத்தை படமாக இயக்கவுள்ள இயக்குநர் கௌதம் மேனன்- இது என்ன புது டுவிஸ்டாக இருக்கு
- தளபதியின் மார்க்கெட்டை முறியடித்த கமல் ஹாசன்- கடந்த காலங்களில் நடக்காத வசூல் சாதனை
- ‘அவரை கட்டிப்பிடித்த போது தலைல இருந்து கால் வரைக்கும் ஒரு நல்ல பீலிங் உருவாச்சு’- விஜய்யின் தாயார் உருக்கம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!