• Sep 09 2024

’ராயன்’ ஆட்டமே இன்னும் முடியலை.. அதற்குள் இன்னொன்றா? வேற லெவல் துஷாரா விஜயன்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

தனுஷ் இயக்கத்தில் உருவான ’ராயன்’ திரைப்படத்தில் துஷாரா விஜயன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில் அவரது நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்து வந்த நிலையில் தற்போது அடுத்த படத்திற்கான டப்பிங் பணியை அவர் துவக்கி உள்ளதை அடுத்து இன்னொரு ஆட்டம் ஆரம்பமா என்ற கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

தனுஷ் நடித்த இயக்கிய ’ராயன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இந்த படம் வசூலித்து சாதனை செய்துள்ளது என்பதும் தெரிந்தது.

இந்த படத்தில் தனுஷை அடுத்து நடிப்புக்கு அதிகமான பாராட்டுக்கள் குவிந்தது துஷாரா விஜயனுக்கு தான் என்பதும் அவர் தனுஷின் தங்கைக்கு கேரக்டரில் மிகவும் இயல்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் என்பதும் தெரிந்தது.



இந்த நிலையில் ’ராயன்’ படத்தின் ஆட்டமே இன்னும் முடியாத நிலையில் அடுத்த கட்டமாக அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ’வேட்டையன்’ படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நிலையில் இந்த படமும் அவருக்கு மிகப் பெரிய புகழை பெற்றுக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’வேட்டையன்’ படத்தில் தனது பகுதிக்கான டப்பிங் பணியை துஷாரா விஜயன் ஆரம்பித்த நிலையில் இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா டகுபாய், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகிணி, ரமேஷ் திலக், ரக்சன், ஜிஎம் சுந்தர் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் ’வேட்டையன்’ படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.   அனிருத் இசையில் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில், பிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement