• May 18 2024

டீ கப் உள்ளே விழுந்த நடிகை காஜல் அகர்வால் - ரசிகர்களை தூக்கி வாரி போட்ட வைரல் வீடியோ.!

Jo / 10 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகையான காஜல் அகர்வால் தமிழில் சின்ன சின்ன ஹீரோக்களுடன் நடித்துவந்த அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் ஹீரோயினாக கமிட்டானார். அதில் அவரது நடிப்பும் அழகும் ரசிகர்களை கவர்ந்துவிட சூர்யா, அஜித்,கார்த்தி உள்ளிட்டோருடன் நடிக்க ஆரம்பித்தார். 

பின்பு  அவர் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துகொண்ட காஜல் ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தார். அந்தக் குழந்தைக்கு நீல் என பெயர் வைத்துள்ளார். அவருடன் நேரம் செலவழித்துவந்த காஜல் அக்ரவால் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து கடைசியாக தமிழில் கருங்காப்பியம் என்ற படத்தில் நடித்தார்.

அதுமட்டுமின்றி ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் தனது 60ஆவது படம் குறித்த அறிவிப்பையும் சமீபத்தில்தான் காஜல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் சினிமாவிலிருந்து விலகப்போவதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது. ஆனால் அதனை காஜல் அகர்வால் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.

இந்நிலையில் காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. 'காலையில் எனது காபியை நான் எடுத்துக்கொள்ள வேண்டும்' என்ற கேப்ஷனோடு தொடங்கும் அந்த வீடியோவில், முதலில் காபி கப் அருகில் இருக்கும் அவர் பிறகு சிறிது தூரம் சென்றுவிட்டு காபி கப்புக்குள் குதிப்பது போல் எடிட் செய்து அந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார். 

இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement