• May 19 2024

நிறைமாத கர்ப்பிணியான நடிகை இலியானா - தீயாய் வைரலாகி வரும் புகைப்படம்..!

Jo / 9 months ago

Advertisement

Listen News!

 தெலுங்கில் வெளியான தேவதாசு மகேஷ் பாபுவின் போக்கிரி படங்கள் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் இலியானா.

அதே ஆண்டு தமிழில் ரவிகிருஷ்ணா நடிப்பில் வெளியான கேடி படத்தில் இலியானாவும் தமன்னாவும் இணைந்து நடித்தனர்.தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த இலியானா நடிகர் விஜய்யுடன் இணைந்து ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் நடித்தார். அதன் பின்னர் தமிழ் படங்களில் இலியானா நடிக்கவே இல்லை.

சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் இலியானா. அது எப்படி திருமணம் ஆகாமலே கர்ப்பம் ஆகலாம் என ஏகப்பட்ட நெட்டிசன்கள் இலியானாவை ட்ரோல் செய்தனர்.

மேலும், அந்த கர்ப்பத்துக்கு யார் காரணம் என்பதையும் இன்னமும் நடிகை இலியானா ரிவீல் செய்யாமல் இருப்பது மேலும், பல ட்ரோல் மீம்களுக்கு வழி வகுத்துள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டத்தட்ட நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ’மை லிட்டில்’ என்று கேப்ஷனையும் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து எப்போது டெலிவரி? சுகப்பிரசவமாக வாழ்த்துக்கள் என ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.





Advertisement

Advertisement