• Jan 19 2025

நடிகர் யோகிபாபுவுக்கு அடித்த ஜாக்பாட்- சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தியதற்கு காரணம் என்ன தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


லொள்ளு சபா என்ற என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி தற்பொழுது தமிழ் சினிமாவின் முக்கிய காமெடி நடிகராக வலம் வருபவர் தான் யோகிபாபு.தனது டைமிங் காமெடிகளாலும் கவுண்ட்டர்களாலும் ரசிகர்களை வெகுவாகவே சிரிக்க வைத்தார். 

இவர் இறுதியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.தொடர்ந்து பல படங்களில் நடித்துவரும் யோகி அயலான் படத்திலும் நடித்திருக்கிறார். அந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. 


இப்படி தமிழ், ஹிந்தி என கலக்கி வரும் யோகிபாபு தற்போது தெலுங்கிலும் என்ட்ரி ஆகவிருக்கிறாராம். பிரபாஸ் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தில்தான் யோகிபாபு கமிட்டாகியிருக்கிறார் என்றும். அதற்காக தனது சம்பளத்தை தமிழில் வாங்குவதைவிடவும் மூன்று மடங்கு உயர்த்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் அவர் டோலிவுட்டிலும் களமிறங்குவதாக வெளியான தகவலை அடுத்து கண்டிப்பாக யோகி தெலுங்கிலும் தனக்கென தனி மார்க்கெட்டை பிடிப்பார் என்று ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.இது தவிர கமலின் இந்தியன் 2 படத்திலும் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement