• May 18 2024

நடிகர் விஜய் ஆண்டனியின் அடுத்த அப்டேட் ... புதிய திரைப்பட மோஷன் போஸ்டர் ரிலீஸ்

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

பவர்புல் டைட்டிலுடன் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 'ரதம்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு புதிய படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு  திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

செப்டம்பர் 19ஆம் தேதி மூத்த மகள் மீராவை இழந்த இவரின் துணிச்சலான நடவடிக்கையால் திரையுலகினர் மத்தியில் அவர் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. தற்போது வெளியாகி உள்ள அவரின் புதிய படத்திற்கு 'ஹிட்லர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தினை இயக்குனர்  தனா இயக்கியுள்ளார்.


கௌதம் மேனனுடன் ரயிலில் விஜய் ஆண்டனி மற்றும் ரியா சுமன் ஆகியோர் திடீரென துப்பாக்கியுடன் தோன்றிய மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. இத்திரைப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார்.  இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக படக்குழு கூறப்படுகிறது.


'ஹிட்லர்' படத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன், கௌதம் வாசுதேவ் மேனன், சரண்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, தமிழ், ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement