• May 18 2024

கார்த்தி - சிவகார்த்திகேயன் படங்கள் நேருக்கு நேர் மோதல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் கார்த்திக்.

அந்தவகையில் தற்போது கார்த்திக் மாதிரி சிவகார்த்திகேயனும் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் டாக்டர் படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் ரூ.100 கோடிக்கும் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

இதனிடையே சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் SK20 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் அப்படத்தை முடிக்கும் முன்பே தற்போது ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஆம், அதன்படி SK 20 திரைப்படமே ஆகஸ்ட் 31 ஆம் வெளியாகும் என அறிவித்துள்ளனர். அத்தோடு டான் திரைப்படம் வெளியாகி மூன்றே மாதத்தில் அவரின் அடுத்த படத்தை களமிறக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.

ஆனால் அதே ஆகஸ்ட் 31 ஆம் தேதி கார்த்தியின் விருமன் திரைப்படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கார்த்தி VS சிவகார்த்திகேயன் போட்டியில் எந்த நடிகரின் திரைப்படம் வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement