• Apr 27 2024

நடிகர் பிரசாந்த் ஏமாத்திட்டாரு.. இலங்கையை சேர்ந்த பெண் பரபரப்பு புகார்-சர்ச்சையில் சிக்கியது எப்படி..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த நடிகர் தான் நடிகர் பிரசாந்த். இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.

அதிலும் இவர் நடிப்பில் வெளியான ஜீன்ஸ், ஜோடி, வின்னர் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கின்றன. மேலும் சில காலம் உடல் எடை அதிகரித்ததால் சினிமாவை விட்டு விலகியிருந்ததோடு தற்பொழுது மீண்டும் ரீ என் ரீ கொடுத்து நடித்து வருகின்றார்.

இந்நிலையில் நடிகர் பிரசாந்த் மீது இலங்கையை சேர்ந்த குமுதினி எனும் பெண் மோசடி புகார் அளித்துள்ளது கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது. பாண்டிபஜார் காவல் நிலையத்திற்கு வந்த அந்த பெண் நடிகர் பிரசாந்த் மீது பண மோசடி புகாரை வாய் மொழியாக அளித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.



சுவிட்சர்லாந்தில் விமான ஊழியராக பணியாற்றி வரும் அந்த பெண்ணுடன் நட்புக் கொண்ட நடிகர் பிரசாந்த் அவரிடம் ரூ. 10 லட்சம் வரை ஏமாற்றி பணம் பறித்து விட்டதாக அந்த பெண் பரபரப்பு குற்றச்சாட்டை காவல் நிலையத்தில் வைத்துள்ளார். அத்தோடு, நடிகர் பிரசாந்த் மீது பல குற்றச்சாட்டுக்களை அடுக்கி உள்ளார்.

சென்னையிலுள்ள பாண்டிபஜார் காவல் நிலையத்தில் அந்த பெண் மீது நடிகர் பிரசாந்த் தரப்பும் புகார் கொடுத்துள்ளது. அத்தோடு, அந்த பெண் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை என்றும் வேணுமென்றே  பெயரைக் கெடுக்க செய்யும் சதி என்றும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திடீரென சுவிட்ஸர்லாந்தில் விமான ஊழியராக வேலை பார்க்கும் பெண் ஒருவர் நடிகர் பிரசாந்த் மீது இப்படியொரு புகாரை சுமத்தியிருப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



இந்தி திரைப்படமான அந்தாதுன் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்கான அந்தகன் திரைப்படத்தை நடிகர் பிரசாந்தின் அப்பா தியாகராஜன் இயக்க பிரசாந்த், பிரியா ஆனந்த், சிம்ரன் மற்றும் வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.மேலும்  இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அந்தகன் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர் பிரசாந்த் மீது இப்படியொரு மோசடி புகார் எழுந்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement