• Apr 28 2024

நடிகர் பாக்கியராஜின் முதல் மனைவியும் நடிகை தானா?- அடடே இதுவரை தெரியாமல் போச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் 80களில் இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் தான் பாக்கியராஜ்.இவர் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குநராக இருந்தவர்.இவர் இயக்கிய முதல் திரைப்படம் தான்  சுவர் இல்லாத சித்திரங்கள்.

இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கிய இவர் தற்பொழுது பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார்.


அத்தோடு இவர் கடந்த  1981ம் ஆண்டு பிரவீனா என்ற நடிகையை திருமணம் செய்தார். ஆனால் அவர் உடல்நலக் குறைவால் 1983ம் ஆண்டு உயிரிழந்தார். பின் பாக்யராஜ் நடிகை பூர்ணிமாவை 1984ம் ஆண்டு மறுமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு சரண்யா மற்றும் ஷாந்தனு பாக்கியராஜ் என ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள் என்பதும் முக்கியமாகும்.இந்த நிலையில் பாக்யராஜின் முதல் மனைவி பிரவீனாவின் புகைப்படம் வெளியாகி வருவதையும் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement