• Mar 28 2023

திடீரென ரசிகர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன்...என்ன விஷயம் ? வைரல் போட்டோஸ் இதோ!

Jo / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். தமிழ் மொழி தாண்டி, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வரும் கமல்ஹாசன், தனது திரைப்படங்களில் புது விதமான விஷயங்களை வைத்து சர்வதேச அளவில் கவனம் பெறவும் செய்வார்.

கடந்த ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி இருந்த விக்ரம் திரைப்படம், பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாகவும் மாறி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, இயக்குநர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் பெரிய வெற்றி பெற்றிருந்த இந்தியன் படத்தின் அடுத்த பாகமான "இந்தியன் 2" படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. 

இந்தியன் 2 படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்திலும் கமல்ஹாசன் நடிக்க உள்ளது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. 

இந்த நிலையில் , சமீபத்தில் தனது ரசிகர்களை கமல்ஹாசன் சந்தித்தது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் நடிகர் கமலையும் அவரது படங்களையும் கொண்டாடும் ரசிகர்கள் சிலரையும் சமீபத்தில் சந்தித்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் கமல்ஹாசன், "சமூகவலைதளங்களில் தொடர்ச்சியாக என்னையும், என் படங்களையும் கொண்டாடும் ரசிகர்களில் சிலரை சந்தித்தேன். சோஷியல் மீடியா வலிமை மிக்க ஊடகம். அதை நல்ல வழிகளில் பயன்படுத்திக்கொள்வது எப்படியென கருத்துப்பரிமாற்றம் செய்துகொண்டோம்" என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement