• Mar 28 2023

என்னாச்சு..! வெற்றிமாறன், ஷூட்டிங் ஸ்பார்டில் கையில் கட்டுடன் சுதா கொங்கரா..அவரே பகிர்ந்த புகைப்படங்கள்!

Jo / 2 weeks ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகியோரை வைத்து ‘விடுதலை’ படத்தை இயக்குகி வருகிறார் வெற்றிமாறன். கடந்த 2 வருடங்களாக நடந்த படப்பிடிப்பு பணிகள் இப்பொது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 

இந்நிலையில், தனது நண்பரான வெற்றிமாறனை படப்பிடிப்பு தளத்துக்கு நேரில் சென்று சந்தித்த இயக்குநர் சுதா கொங்கரா, விடுதலை படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு இதுதான் என உறுதிபடுத்தியுள்ளார்.

கடந்த மாதம் சுதா கொங்கரா ட்விட்டரில் தனது கை உடைந்ததைக் சுட்டி காட்டி, மிகவும் வலிக்கிறது. எரிச்சலூட்டும், ஒரு மாத இடைவெளியில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

நேற்று, இயக்குநர் வெற்றி மாறனுடன் விடுதலை படப்பிடிப்பு தளத்தில் அவரை சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் சுதா கொங்கரா,”எனது இருண்ட இடைவெளியில் இருந்து விடுதலை. எனது நண்பர் (வெற்றி மாறன்) கூறுவது அவரது உறுதியான கடைசி நாள் படப்பிடிப்பின் இறுதி நாள் என்று குறிப்பிட்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

விடுதலைப் படப்பிடிப்பிற்கு இது உறுதியான கடைசி நாள் என்பதை சுந்தா கொங்கரா உறுதி செய்திருப்பதால், விரைவில் விடுதலை பார்ட் 1 திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். அந்த வகையில், விடுதலை திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




Advertisement

Advertisement

Advertisement