• May 18 2024

பான் இந்தியா ஸ்டாருக்கான சைமா விருதினை தட்டிச் சென்ற நடிகர் கமல்ஹாசன்- விக்ரம் படம் கொடுத்த சூப்பர் கௌரவம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

2022 ஆம் ஆண்டிற்கான ஒரிஜினல் பான் இந்தியா ஸ்டாருக்கான சைமா விருது நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித் வருகின்றனர்.

 2022 ஆம் ஆண்டிற்கான SIIMA விருதுகள் வழங்கும் விழா பெங்களூரில் நேற்றைய தினம் நடைபெற்றது.இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான படங்களுக்கும் சிறந்த நடிகர் மற்றும் நடிகைகளுக்கான விருதும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.


அந்த வகையில் இந்த நிகழ்வில் கே.ஜி.எஃப் பட நடிகர் யாஷ், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகர் கமல்ஹாசன், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர். சிறந்த இயக்குநர்கள், சிறந்த திரைப்படம், ஸ்ரீகாந்தை நடிகர் என பல்வேறு பட்டியலில் கீழ் விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், நடிகர் கமல்ஹாசனுக்கு 2022 ஆம் ஆண்டிற்கான ஒரிஜினல் பான் இந்தியா ஸ்டாருக்கான சைமா விருது வழங்கப்பட்டுள்ளது.


வெற்றிகரமாக 100 நாட்களை கடந்து ஓடி வரும் விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்ததோடு இப்படம் அனைத்து மொழி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்ததும் முக்கியமாகும்.


அத்தோடு விருதைப் பெற்ற கமல்ஹாசனுக்கு ரசிகர்கள் தமது வாழ்த்தினைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement