• May 18 2024

பிரபல நடிகர்களுக்கு குரல் கொடுத்த டப்பிங் கலைஞர் காலமானார்...சோகத்தில் திரையுலகம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தெலுங்கு டப்பிங் கலைஞர் ஸ்ரீநிவாச மூர்த்தி உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று  திடீரென காலமானார். அவரது மறைவுக்கு மாரடைப்பு தான் காரணம் என கூறப்படுகின்றது. ஆனால், இது குறித்த தெளிவான விளக்கம் ஏதும் வெளியாகவில்லை. இப்பொது, இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள்.


டோலிவுட்டில் பிரபல டப்பிங் கலைஞர்களில் ஸ்ரீநிவாச மூர்த்தியும் ஒருவர்.இவர்  குறிப்பாக தெலுங்கு படங்களில் எதிர் மறையான கதாபாத்திரங்களுக்கு டப்பிங் கொடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தமிழ் நடிகர்களான அஜித் மற்றும் சியான் விக்ரம், சூர்யா என பிரபல நட்சத்திரங்களுக்கும்  குரல் கொடுத்து பிரபலம் ஆனார்.


அந்த வகையில், நடிகர் சூர்யா நடிப்பில் தெலுங்கில் வெளியான அனைத்து திரைப்படங்களுக்கும் அவர் குரல் கொடுத்துள்ளார். அத்தோடு, இவர் அஜித்தின் ‘விஸ்வாசம்’ மற்றும் ஆர்.மாதவனின் சமீபத்திய படமான ராக்கெட்ரி படங்களுக்கு தெலுங்கில் டப்பிங் பேசியுள்ளார்.


அத்தோடு மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தெலுங்கிலும், கன்னட நடிகர் உபேந்திராவுக்கும் தெலுங்கில் வெளியாகும் படத்துக்கு டப்பிங் கொடுத்துள்ளார். மேலும் இது போக, சியான் விக்ரமின் அந்நியன் படத்தில் அவர் டப்பிங் செய்த தெலுங்கில் வெளியான பின்னர் அவரது குரல் மகத்தான வரவேற்பைப் பெற்றது.

Advertisement

Advertisement