• May 18 2024

கடனை கட்டாததால் ஏலம் போன பிரபலத்தின் வீடு – திடீரென மதுவந்தி கொடுத்த புகார்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

என்னுடைய 30 லட்சம் மதிப்பிலான பொருள்களை மீட்டுத்தர வேண்டும், பைனான்ஸ் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மதுவந்தி அளித்திருக்கும் புகார் தற்போது சமூகவலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் ஒய்.ஜி மகேந்திரன்.மேலும்  இவரின் மகள் தான் மதுவந்தி. அடிக்கடி இவரை பற்றி எதாவது ஒரு சர்ச்சை சோசியல் பற்றி வந்து கொண்டே இருக்கு.மதுவந்தி அவர்கள் பாஜகவின் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். இவர் சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் இரண்டாவது குறுக்கு தெருவில் உள்ள ஆசியான அப்பார்ட்மெண்டில் உள்ள தன்னுடைய சொந்த வீட்டில் கடந்த சில வருடங்களாக வசித்து வந்தார். 

மேலும் இவர் இந்த வீடு வாங்குவதற்காக 2016 ஆம் ஆண்டு இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார். அத்தோடு வீட்டை வாங்கிய பின்னர்  சில தவணைகள் மட்டும் இவர் கட்டி வந்து இருந்தார்.

அதற்குப் பிறகு மதுவந்தி எந்த தவணையும் கட்டவில்லை மற்றும் முழுப்பணமும் திருப்பி செலுத்தவில்லை என்று சொல்லப்படுகின்றது.இதன் பிறகு பல மாதங்களாகவே வட்டி பணம் கட்ட சொல்லி இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் கேட்டு இருந்தார்கள். ஆனால், மதுவந்தி பணம் கட்டாமல் இன்று நாளை என்று இழுத்தடித்து வந்து இருந்தார். எனினும் இதனை அடுத்து வங்கி அதிகாரிகள் வட்டியுடன் அசலையும் சேர்த்து கட்ட சொல்லி அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அத்தோடு , பைனான்ஸ் நிறுவனம் அனுப்பிய நோட்டீஸ்க்கு மதுவந்தி எந்த ஒரு பதிலும் கூறவில்லை.

இதனை அடுத்து இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் மதுவந்தி மீது வழக்கு போட்டிருந்தார்கள். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மதுவந்தி செலுத்த வேண்டிய தொகைக்கு அவரின் வீட்டிற்கு சீல் வைத்து வீட்டை இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டுமென்று உத்தரவிட்டு இருந்தது. எனினும் இதனைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி அட்வகேட் கமிஷனர் வினோத்குமார் முன்னிலையில் மதிவந்தியின் வீட்டை போலீசார் பாதுகாப்போடு சீல் வைத்து வீட்டு சாவியை பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.



அத்தோடு, வீடு சீல் வைக்கப்பட்ட சில தினங்களிலேயே வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துக் கொள்ளுமாறு பைனான்ஸ் தரப்பில் இருந்து மதுவந்திக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள். ஆனால், மதுவந்தி பொருட்களை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்திருக்கிறார். பின் பைனான்ஸ் நிறுவனம் வீட்டை மற்றொரு நபருக்கு ஏலம் விட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் மதுவந்தி அவர்கள் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். மேலும் அதில் அவர், வீட்டை ஏலம் விட்டது எனக்கு தெரியாது. வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் மாயமாகி இருக்கிறது.

பொருள்களின் மொத்த மதிப்பு 35 லட்சம். அந்த பொருட்களை மீட்டு தர வேண்டும். எனக்கு தெரியாமல் என்னுடைய வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் சேர்த்து ஏலம் விட்ட பைனான்ஸ் கம்பெனியின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். எனினும் குறிப்பாக, பைனான்ஸ் நிறுவன மண்டல மேலாளர் உமா சங்கர் மற்றும் கார்த்திகேயன் உட்பட பத்து நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் குறிப்பிட்டு இருக்கிறார். இதனை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement