• Oct 09 2024

யம்மாடியோவ்.... சிக்ஸ் பேக் காட்டி மிரள வைக்கும் சூர்யா - தீயாய் வைரலாகி வரும் புகைப்படம்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. அவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகி உள்ளது. சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். மேலும் வில்லனாக நட்டி நட்ராஜ் நடித்து வருகிறார். 


கங்குவா திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் தான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

கடந்த மாதம் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளன்று கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வேறலெவலில் வைரல் ஆனது. அந்த கிளிம்ப்ஸ் வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் வகையில் அமைந்திருந்தது.

கங்குவா படத்திற்காக தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடலை செம்ம பிட்டாக வைத்திருக்கும் நடிகர் சூர்யா, சிக்ஸ் பேக் உடற்கட்டை காட்டியபடி போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது. ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்தபோது சூர்யா எடுத்த அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதென்ன  சிக்ஸ்பேக்கை வர்ணித்து வருகின்றனர். 

48 வயதிலும் இவ்வளவு பிட்டாக இருக்கும் சூர்யாவை பார்த்து ரசிகர்கள் பிரம்மித்துப் போய் உள்ளனர்.இந்த புகைப்படம் தற்போது செம வைரலாகி வருகின்றது.



Advertisement