• May 19 2024

ரோபோ ஷங்கரின் புகைப்படத்தால் மறுபடியும் ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவைப் பொறுத்தவரையில் காலத்திற்கு காலம் பல நடிகர்கள், நடிகைகள் உருவாகிய வண்ணம் தான் இருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக ஒரு சிலர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மாறியவர்களாக காணப்படுகின்றனர். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக நடிகர் சிவகார்த்திகேயனை கூறலாம். 

இவரைப் போலவே சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த ஒருவரே ரோபோ ஷங்கர். அந்தவகையில் தொலைக்காட்சி முதல் திரைப்படங்கள் வரை அவரது பயணம் காமெடி நடிகனாகவே தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது.

 வெள்ளித்திரையில் 'தீபாவளி' என்ற படம் மூலம் தனது சினிமாப் பயணத்தை தொடங்கி இருக்கின்றார். அதுமட்டுமல்லாது பல முன்னணி நடிகர்களின் படங்களில் எல்லாம் நடித்து அசத்தி இருக்கின்றார். டாப் காமெடி நடிகர்கள் என்று எடுத்தால் அந்த டாப் லிஸ்டில் இவரது பெயர் கண்டிப்பாக இடம்பெற்றுவிடுகிறது.

ரோபோ ஷங்கர் கடந்த சில மாதங்களாக அதிகம் உடல் எடையை குறைத்து மிக ஒல்லியாக மாறி வருவது பலருக்கும் அதிக அளவு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் அவருக்கு உடலில் என்ன பிரச்சனை என்று தான் தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இவ்வாறுஇருக்கையில் தற்போது ரோபோ ஷங்கர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோபோ ஷங்கர் இன்னும் ஒல்லியாக மாறி இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர். 



Advertisement

Advertisement