• Jan 19 2025

குரங்கு சாப்பிட ஒரு கோடி ரூபாய் வழங்கிய முக்கிய நடிகர்! இது என்ன புதுசா இருக்கு...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் குரங்குகளுக்கு உணவளிக்கும் பணிகளை ஆஞ்சநேயா சேவா என்ற தொண்டு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அயோத்தியில் உள்ள குரங்குகளுக்கு உணவளிக்கும் தொண்டு நிறுவனத்திற்கு பாலிவுட் நடிகர் அக்சய் குமார் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.


இது குறித்து ஆஞ்சநேயா சேவா தொண்டு நிறுவனத்தின் தலைவர் பிரியா குப்தா கூறுகையில், "நடிகர் அக்சய் குமார் இரக்க குணம் கொண்ட பண்புள்ள மனிதர். அவர் மிகுந்த பெருந்தன்மையோடு இந்த நன்கொடையை வழங்கியுள்ளார். 


நாங்கள் குரங்குகளுக்கு உணவளிப்பதோடு மட்டுமின்றி, குரங்குகளால் மனிதர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் கவனமாக நடந்து கொள்கிறோம்" என்று தெரிவித்தார். நடிகர் அக்சய் குமார் நடித்துள்ள 'சிங்கம் அகெய்ன்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

  

Advertisement

Advertisement