• May 18 2024

தமிழ் செய்தது பிழை என சுட்டிக் காட்ட வசுந்தரா செய்த காரியம்- நடேசனிடம் வசமாக சிக்கிய அர்ஜீன்- கோதை எடுத்த முடிவு

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

வசு போன் பண்ணி சரஸ்வதியிடம் வீட்டில் நடந்த விஷயங்களைப் பற்றி பேசுகின்றார். அப்போது சரஸ்வதி தமிழ் தன் மீது சந்தேகப்படும் விஷயத்தைச் சொல்கின்றார். இதனால் வசு தமிழ் மாமாவா இப்படி பண்ணுராரு அவர் கிட்ட நான் வந்து பேசுகின்றேன் என்று கூறுகின்றார்.அதேபோல தமிழின் கம்பனிக்கு ஓர் சேனலைக் கூட்டிக் கொண்டு வருகின்றார்.


வசு கூட்டிட்டு வந்த சேனலுக்கு இன்டர்வியூ கொடுக்கும் தமிழிடம் சரஸ்வதி வேலைக்கு போறது குறித்து பல கேள்விகளைக் கேட்க பதில் சொன்ன தமிழ் சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்க வசு உடனேயே அக்காவும் மாமாவும் சூப்பர் கப்பிள்ஸ். இவங்க மனசில நினைக்கிறதை சொல்லாமலே புரிஞ்சுக்கிற ஜோடி என சரஸ்வதி பற்றியும் தமிழ் பற்றியும் பெருமையாகப் பேச தமிழ் யோசிச்சுக் கொண்டிருக்கின்றார்.

தொடர்ந்து ராகினி அர்ஜீனிடம் இந்த சேர்ட் பட்டின் எங்க என்று கேட்க அர்ஜீன் தெரில என்று சொல்ல அந்த நேரம் நடேசன் பட்டினைக் கொண்டு வந்து கொடுத்து இது தான என்று கேட்க அர்ஜீன் அதிர்ச்சியடைகின்றார். பின்னர் நீங்க எப்படி என் ரூமுக்குள் வந்தனீங்க என்று கேட்க அர்ஜீன் நான் வரல மாடி இருக்கிற பூச்சாடி விழப்போக நன் பிடிச்சனான் அந்த டைம்ல தான் பட்டின் அறுந்து மாமா ரூமுக்குள் போயிருக்கனும் என்று கதை விடுகின்றார்.


இருந்தாலும் இதையெல்லாம் நம்பாமல் நடேசன் சந்துகத்துடன் செல்கின்றார். தொடர்ந்து வீட்டிற்கு வரும் தமிழும் நமச்சியும் சரஸ்வதியிடம் வேலைக்க போகலையா என்று கேட்க சரஸ்வதி இனிமேல் நான் வேலைக்கு போகவே மாட்டேன்.வேலைக்க போவதால் தானே நிறைய குழப்பம் வருது என்று சொல்கின்றார்.நமச்சி அட்வைஸ்ட் பண்ணியும் சரஸ்வதி கேட்பதாக இல்லை. இதனால் தமிழ் தான் செய்ததை நினைத்து கவலைப்படுகின்றார்.

பின்னர் விடிந்ததும் கோதையுடன் கோயிலுக்க போகும் நமச்சி எல்லா விஷயத்தையும் கோதையிடம் சொல்ல கோதை எதையும் நம்பாமல் வீணாக மாப்பிள்ளை மீது பழி போடாதீங்க. வீட்டில இது பற்றி பேசாதீங்க என்று சொல்லி விட்டுச் செல்கின்றார்.இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement