• Oct 08 2024

தேசப்பற்று இல்லாதவருக்கு இந்தியாவில் என்ன வேலை; சூர்யாவை கண்டித்த காயத்ரி

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரைப்படத் துறையில் ஆரம்பத்தில் ஒரு நடனக் கலைஞராக பணிபுரிந்து பின்னர் நடிகையாக மாறிய ஒருவரே நடிகை காயத்ரி ரகுராம். இவர் 2002-ஆம் ஆண்டில் வெளியாகி இருந்த 'சார்லி சாப்ளின்' என்ற படத்தின் மூலம் ஒரு நடிகையாக அறிமுகமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது பாரதிய ஜனதா கட்சியில் நிர்வாகியாகவும் இருந்து வருகின்றார்.

இந்தநிலையில் இவர் சமீபத்தில் மாதவனின் நடிப்பில் வெளியாகி இருந்த 'ராக்கெட்ரி' படம் தொடர்பாக பேட்டி ஒன்றினை அளித்திருந்தார். அதில் நடிகர் சூர்யா தொடர்பான குற்றச்சாட்டு ஒன்றினையும் முன்வைத்து இருக்கின்றார்.

அதாவது அப்படத்தில் பேட்டி எடுக்கும் காட்சி ஒன்று இடம்பெறுகின்றது. அதில் நம்பி நாராயணனாக நடித்த மாதவன் பேட்டி முடிந்ததும் 'ஜெய்ஹிந்த்' எனக் கூறுவார். அதேபோன்று ஹிந்தி மொழியில் நம்பி நாராயணனை பேட்டி எடுத்த நடிகர் ஷாருக்கனும் பதிலுக்கு 'ஜெய்ஹிந்த்' எனக்கூறி முடிப்பார். அதே போன்று தமிழ் மொழியில் நடிகர் சூர்யா பேட்டி எடுப்பார். ஆனால் சூர்யா மட்டும் 'ஜெய்ஹிந்த்' எனக்கூறி பேட்டியை முடிக்க மாட்டார்.

இது தொடர்பாக நடிகை காயத்ரி குறிப்பிடுகையில் "சூர்யா அந்த வார்த்தையைக் கூறாமைக்கான காரணம் என்ன? அது கொச்சை வார்த்தையா?" என அப்பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் "அது ஹிந்தி மொழி என்பதால் தான் அந்த வார்த்தையை சொல்லவில்லையா? தேசப்பற்று இல்லாத ஒருவருக்கு இந்தியாவில் என்ன வேலை? தேசப்பற்று இல்லையாயின் இந்தியாவை விட்டு வேறு நாட்டுக்குச் செல்லலாம். அதற்கான ஏற்பாட்டை செய்து கொடுக்க நான் தயாராக இருக்கின்றேன்." எனக்கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் "இதற்கான சரியான விளக்கத்தை தகுந்த முறையில் சூர்யா கொடுக்காவிடில் அவர் திட்டமிட்டே இந்தக் காரியத்தை செய்தார் என்றே நாம் அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்" எனவும் தெரிவித்து இருக்கின்றார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement