• May 19 2024

அழுது துடிக்கும் குணசேகரன்... ஜனனியிடம் கெஞ்சிக் கதறும் விசாலாட்சி... கரிகாலனுக்கு வந்த சந்தேகம்... சூடு பிடிக்கும் 'எதிர்நீச்சல்' எபிசோட்..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ரசிகர்களின் விறுவிறுப்பைத் தூண்டியவாறு அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில் என்ன நடந்துள்ளது என்பதை பார்ப்போம்.

அந்தவகையில் விசாலாட்சி குணசேகரன் உடைய நிலையைப் பார்த்து கவலையில் கடவுளிடம் மகனுக்கு விரைவில் உடல் நலம் சரியாக வேண்டும் எனவேண்டிக் கொள்கின்றார். அதை பார்த்த குணசேகரன் "நான் ரொம்ப பெரிய பிரச்சனையில மாட்டிகிட்டு தவிச்சிட்டு இருக்கேன். அந்த நரைச்ச முடி கிழவி சொத்துக்களை எல்லாம் ஒரு ரவுடி பய வாயில போட்டுருச்சு. இதை எல்லாம் சம்பாதிக்க நான் இவ்வளவு காலமும் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன் தெரியுமா" எனக் கூறி கண் கலங்குகின்றார்.


மேலும் "சொத்து போனது கூட பரவாயில்ல ஆனால் மானத்தை இழந்து அலங்கோலமா நின்னேன், இந்த ஜனனியை தலை மேல தூக்கி வச்சுக்கிட்டு எப்படி எல்லாம் ஆடுன. இப்படி சொத்து எல்லாம் போனதற்ககு முக்கிய காரணமீ ஜனனி தான், உன்னோட மருமகள்கள் கிட்ட சொல்லிட்டேன். போன சொத்தை எல்லாம் திருப்பி கொண்டு வருவது அவங்களோட கடமை" எனக் குணசேகரன் கூறுகின்றார்.

பதிலுக்கு ரேணுகா "நாங்க ஏதோ தப்பு செய்த மாதிரி கடமைன்னு சொல்றீங்க. ஆரம்பத்திலே உதவி பண்ணுங்கன்னு எங்ககிட்ட சொல்லிட்டு இப்போ எங்க தலையில கட்டுறீங்க. உங்க அப்பத்தா  ஏமாந்து யார்கிட்டயோ கொடுத்ததுக்கு நாங்க என்ன பண்ண முடியும். உங்களால முடியாத போது எங்களை சும்மா விட்டு விடுவானா?" எனக் கேள்வியெழுப்புகின்றார்.


அதற்கு ஞானம் கோபத்தில் "இங்க மட்டும் பாய்ண்ட் பாய்ண்டா பேசுற இல்ல. அங்க போய் பேசு" என ரேணுகாவைத் திட்டுகின்றார். பதிலுக்கு ரேணுகா, நீங்களே உங்க பிள்ளை விஷயத்தில் கூட இறங்கி வராமல் புடிச்சு வைச்ச பிள்ளையார் மாதிரி இருந்தீங்க, அப்போ  எவனோ ஒருத்தன் எப்படி இறங்கி வருவான் என்கிறார்.

அதற்கு ஞானம் "எங்களுக்கு அதெல்லாம் தெரியாது நீ போய் சொத்தை வாங்கிட்டு வரணும்" எனக் கூறுகின்றார். பின்னர் "அது தான் இத்தனை ஆம்பள ஆட்கள் இருக்குறீங்க இல்ல போய் களத்தில் இறங்கி வாங்கிட்டு வர வேண்டியது தானே" என திரும்பத் திரும்ப மறுத்துப் பேச, ரேணுகாவி அடிக்க கை ஓங்குகிறானர் ஞானம். இதனையடுத்து அனைவரும் சேர்ந்து ஞானத்தை தடுக்கிறார்கள். 


இதனைப் பார்த்த ஜனனி உடனே "சொத்தை நாங்க வாங்கி தரோம். அது உங்க கைக்கு வரும். இதுக்கு மேல பேசாதீங்க" என கூறுகின்றார். குணசேகரன் பதிலுக்கு நான் போய் கொஞ்ச நேரம் படுக்கறேன் என கூறி செல்கிறார். இதனையடுத்து விசாலாட்சி ஜனனியிடம், நீ தான் அந்த கிழவியோட சேர்ந்து ஆட்டம் போட்ட. இப்போ நீ தான் அதை திருப்பி கொண்டு வரணும். இது எல்லாமே பெரியவன் கஷ்டப்பட்டு சம்பாதிச்சது. அதை அவன் கிட்ட கொண்டு வந்து சேர்க்கணும். அவனுக்கு ஏதாவது ஆச்சுன்னா இந்த வீடே சுக்கு நூறா போயிடும்" எனக் கூறிக் கண்ணீர் வடிக்கின்றார்.

மறுபுறம் ஆடிட்டர் வந்து "சட்டப்படி போகலாம் என சொன்னீங்களே என்ன முடிவு பண்ணி இருக்கீங்க?" என கேட்கிறார். உடனே கரிகாலன் "இன்னும் இவரை நம்புறியா மாமா. இவர் அந்த ஜீவனந்தனுக்கு உதவியா இருக்காரு என எனக்கு சந்தேகமா இருக்கு" என குணசேகரனிடம் கூறுகின்றார். பதிலுக்கு குணசேகரனும் "நீ சொன்னது சரி ஆனா இந்த ஆளுக்கு அவ்வளவு விவரம் கிடையாது" என்கிறார்.


இதனைத் தொடர்ந்து ஆடிட்டர் "உங்கள் மருமகள்கள் பெயரில் இருந்த சொத்தை திருப்பி வாங்கியதை ரெஜிஸ்டர் செய்ய வேண்டாம். அது அவர்கள் பெயரிலேயே இருக்கட்டும். உங்க சொத்துக்காக அவங்க போராடுவதை விட அவங்க சொத்துக்காக அவங்க போராடுறது தானே ஸ்ட்ராங்கா இருக்கும். அது தான் நல்லது" எனக் கூறி குணசேகரனுக்கு விளக்கம் அளிக்கின்றார். குணசேகரனும் ஆம் என்பது போல் சம்மதிக்கின்றார்.

பின்பு "கோயம்புத்தூரில் உள்ள ஒரு சித்த மருத்துவரை சந்திப்பதற்காக நானும் கதிரும் நாளை காரில் சென்று இரண்டு நாட்கள் தங்கி ட்ரீட்மென்ட் எடுத்து விட்டு வருகிறோம்" எனக் கூறிய குணசேகரன் "நீ வீட்டில் இருந்து இந்த பிரச்சனைகளை பார்த்துக்க. பொம்பளைகள் பேரில் எழுதின பத்திரங்களை எல்லாம் ஆடிட்டர் கிட்ட கொடுத்து விடு" எனவும் ஞானத்திடம் கூறுகின்றார்.

மறுபுறம் சக்தியும் ஜனனியும் ஜீவானந்தம் பற்றின அனைத்து விஷயங்களையும் அவனை சந்திப்பதற்கு முன்னரே தெரிந்து கொள்ள வேண்டும் என ஜீவானந்தம் குறித்துப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பின்னர் ரேணுகா சக்தியும் ஜனனியும் வீட்டில் இல்லாததை நினைத்து மிகவும் கவலை படுகிறார். பதிலுக்கு நந்தினி அவர்கள் ஏதாவது வேலை விஷயமாக தான் சென்று இருப்பார்கள் நீங்கள் கவலைப்படாதீர்கள் என ஆறுதல் கூறுகிறார். இதனையடுத்து குணசேகரன் ஊருக்கு கிளம்ப தயாராகி விட்டார். 

இவ்வாறாக இந்த எபிசோட் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement