• May 17 2024

Bro... நா தண்ணி கேன் போட வந்தேங்க..! தளபதி 68 தொடர்பில் பிரேம்ஜி பகிர்ந்த வைரல் மீம்ஸ்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் அவர்கள் தனது 68 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். ஏற்கனவே இந்த திரைப்படத்தின் பூஜை நடந்து முடிந்துள்ளது.

குறிப்பாக விஜய் அவர்களின் இளமையான அந்த தோற்றம், அவருடைய ரசிகர்களை மிகப்பெரிய அளவில் உற்சாகப்படுத்தி வருகிறது என்றே கூறலாம். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் நடிகைகளான பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வெங்கட் பிரபு பல ஹிட் படங்களை இயக்கி வரும் நிலையில், தான் இயக்கும் படங்களில் தனது தம்பி பிரேம்ஜியை காமெடி நடிகராக நடிக்க வைத்து வருகிறார்.

ஆனாலும், தளபதி 68 படத்தில் பிரேம்ஜியை மட்டும் இணைக்கக் கூடாது என ரசிகர்கள் கோரிக்கை வைத்த நிலையில், பட பூஜையிலேயே பிரேம்ஜி மட்டுமின்றி அவருடன் சென்னை 28 கேங்கை இந்த படத்திலும் கொண்டு வந்து விட்டேன் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


இவ்வாறான நிலையில், தளபதி 68 படத்தில் 'தண்ணி கேன் போட வந்தேங்க' என  பிரேம்ஜி சொல்வது போல் உருவாக்கப்பட்ட ஓவிய மீம்ஸ்க்கு  ஸ்மைலி எமோஜிக்களை போட்டு பகிர்ந்துள்ளார்.

இதேவேளை, விக்ரம் படத்தில் 'தண்ணி கேன் போட வந்தேங்க' என இளைஞனொருவர் பேசும் வசனம் டிரெண்டான நிலையில், அதை வைத்து பிரேம்ஜியை ஓட்டியுள்ளனர் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 


Advertisement

Advertisement