விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் இன்றைய நாள் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் வீட்டில் நிறைய புரட்சி நடந்து இருக்கு எல்லாம் இன்று விசாரிப்போம் என்று விஜய் சேதுபதி அசால்ட்டாக கூறியுள்ளார். வெளியாகிய ப்ரோமோவில் என்ன இருக்கிறது என பார்ப்போம் வாங்க.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் மேனேஜர்ஸ்-வர்க்கஸ் என்ற டாஸ்க் வழங்கபட்டது. இதில் ஒரு அணி மேனேஜர்களாகவும் மற்றைய அணி வர்க்கஸாகவும் இருந்தனர். மற்ற டாஸ்குகளில் எல்லாம் அடித்து தும்சம் பண்ணிய போட்டியாளர்கள் இந்த டாஸ்க்கையும் அப்படித்தான் விளையாடி இருக்கிறார்கள்.
இந்நிலையில் இது குறித்து பேசிய விஜய் சேதுபதி இந்த வீட்டில் போட்டியாளர்களிடம் இது சரி என்று சொன்னால் கொண்டாடுகிறார்கள் அதுவே தவறு என்று சொன்னால் அதிகார குரல் எழுப்புகிறார்கள். சரிய கொண்டாடுற அளவுக்கு தவறையும் கொண்டாடுறாங்க, உரிமைகளுக்காக புரட்சி செய்யலாம் ஆனா இந்த வீட்டுக்குள்ள அதுக்கு என அவசியம்? இதனை விசாரிப்போம் என்று கூறியுள்ளார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.
Listen News!