• May 18 2024

'லியோ'படத்தில் தனது காட்சிகளை நடித்து முடித்த விஜய்- லோகேஷ் கனகராஜ் போட்ட முக்கிய பதிவு

stella / 10 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. 'மாஸ்டர்' பாடல் போல் இல்லாமல் தற்போது விஜய்யுடன் இணைந்துள்ள படத்தை முழுக்க முழுக்க தன்னுடைய பாணியில் இயக்கி வருகிறார். விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவர் பாடிய 'நா ரெடி' பாடல் அண்மையில்  வெளியானது.

அனிரூத் இசையில் வெளியாகியுள்ள இந்தப்பாடலுக்கு தொடர்ச்சியாக வைப் செய்து வருகின்றனர் ரசிகர்கள். அதே நேரம் இந்தப்பாடல் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. விஜய் பாடல் முழுக்க சிகரெட் பிடிப்பதை போல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் டிரெண்டிங்கில் மாஸ் காட்டி வருகிறது 'நா ரெடி' பாடல்.


இந்நிலையில் 'லியோ' படம் குறித்த சூப்பரான அப்டேட்டை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்தப்படத்தில் தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பு முழுவதையும் நிறைவு செய்துள்ளாராம் விஜய். இதற்காக விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 'இரண்டாவது பயணத்தை மீண்டும் சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி அண்ணா' என பதிவிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

செவன் ஸ்கிரீன் தயாரித்துள்ள 'லியோ' படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடித்துள்ளார். இவர்களுடன் பாலிவூட் பிரபலம் சஞ்சய் தத், இயக்குநர்கள் மிஷ்கின், கெளதம் மேனன் மற்றும் அர்ஜுன், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வருகின்றனர். லியோவை தொடர்ந்து விஜய்யின் 'தளபதி 68' படத்தினை வெங்கட் பிரபு இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement