• May 18 2024

இந்த படத்தில் நடித்ததற்கு விஜய்யே பெருமைப்படுவார்- லியோ படம் பற்றி வெளியாகிய ஹிந்தி விமர்சனம்

stella / 6 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19-ந் தேதி, அதாவது நாளை ரிலீஸ் ஆக உள்ளது. எனவே இப்படத்தை வரவேற்க ரசிகர்கள் இப்போதே தயாராகி விட்டனர். தமிழக அரசு அதிகாலை காட்சிக்கு மறுப்பு தெரிவித்துள்ளதால், தமிழகத்தில் முதல் காட்சி, 9 மணிக்கு தான் துவங்க உள்ளது.

 எனவே அண்டை மாநிலங்களான, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி போன்றவற்றில் காலை 7 மணி மற்றும் 4 மணி காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் சிலர் அண்டை மாநிலங்களுக்கு படையெடுத்துள்ளதாக தெரிகிறது.


இது ஒருபுறம் இருக்க, 'லியோ' படக்குழுவினருக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் லியோ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, இப்படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சில நொடிகளே ஒளிபரப்பாகும் இந்த காட்சி திரையரங்கில் படத்தின் டெஸ்டிங் காட்சி திரையிடப்பட்ட போது எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.இந்நிலையில் தற்போது லியோ பட விமர்சனம் ஹிந்தி மீடியாவில் இருந்து வெளியாகி இருக்கிறது.


'லியோ நடித்ததற்கு விஜய்யே பெருமைப்படுவார். படத்தில் ஒரு காட்சி கூட மிஸ் பண்ணிடாதீங்க' என குறிப்பிட்டு இருக்கின்றனர்.இந்த விமர்சனம் தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement