• May 21 2024

’தெறி’ இந்தி ரீமேக் டைட்டில், ரிலீஸ் தேதி அறிவிப்பு.. மாஸ் வீடியோ வைரல்..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!


 தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் கடந்த  2016 ஆம் ஆண்டு வெளியான வெற்றி படம் ’தெறி’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

மேலும் இந்த படத்தின் பூஜை கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த போது அதில் தயாரிப்பாளர்களாக அட்லி மற்றும் பிரியா அட்லி கலந்து கொண்டனர். விஜய் நடித்த கேரக்டரில் வருண் தவான் நடிக்க,  கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகிய இருவரும் நாயகிகளாக இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த படத்திற்கு ’பேபி ஜான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.  வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ஷீபா சதா உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை அட்லியின் உதவியாளர் காலீஸ் என்பவர் இயக்கி வருகிறார். மேலும் இந்த படம் வரும் மே 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



Advertisement

Advertisement