• May 10 2024

வடிவேலு படத்தின் முதலாவது சிங்கிள் வெளியீடு... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சிரிப்பிற்குப் பேர் போனவை என்றாலே அது நம்ம வடிவேலு காமெடிதானுங்க. எந்தக் கவலையில் இருந்தாலும் நம்ம தலைவர் காமெடியா பார்த்தா உடனே அந்தக் கவலையை மறந்து எல்லாருமே சிரிச்சிடுவாங்க.

இவ்வாறாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நகைச்சுவையாளராக திகழ்பவர்தான் வைகைப்புயல் வடிவேலு. தன்னுடைய அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்பினால் தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார்.

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் சுராஜ் இயக்கும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' என்ற படத்தில் நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் வடிவேலுடன் ரெட்டின் கிங்சி, சிவாங்கி, ஆனந்தராஜ், முனிஸ்காந்த், ராமதாஸ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

அதேபோல் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியிட தயாரிப்பு நிறுவனமான லைகா முயற்சித்து வருகிறது. இதனை அடுத்து இந்த மாத இறுதியில் இருந்து 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளில் இறங்குகின்றனர் படக்குழுவினர்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரியளவிலான வரவேற்பை பெற்று வடிவேலுவின் அசத்தலான ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அந்த வரிசையில் தற்போது மற்றுமொரு அசத்தலான தகவல் இப்படம் தொடர்பாக வெளியாகியுள்ளது.

அதில் முதற்கட்டமாக சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள பாடலை வெளியிட உள்ளனர். அதில் எந்தப் பாடலை முதலில் வெளியிடுவது என்ற யோசனையில் இன்னமும் உள்ளனர் படக்குழுவினர். அந்தவகையில் இந்தப் படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களை நம்ம வடிவேலு தான் பாடியுள்ளார். அதில் ஒரு பாடலுக்கு நடனப்புயலான பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். அந்த பாடல் நகைச்சுவை பாணி நிறைந்த வகையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படத்தின் முதலாவது சிங்கிளை இந்த மாத இறுதியில் படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

நம்ம வடிவேலுவின் படப் பாடல் ஆச்சே..ரசிகர்கள் சும்மா இருப்பாங்களா…இப்பவே இப்பாடலுக்காக ரொம்ப ஆரவாரத்தோடு காத்திட்டு இருக்காங்கப்பா வடிவேலு ரசிகர்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement