• Mar 28 2023

வடிவேலு தவறவிட்ட திரைப்படம்... இதில் மட்டும் நடித்திருந்தால் வேற லெவல் ஆகியிருப்பார்...

ammu / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நாயகன் என்றாலே வடிவேலு தான் என்ற வகையில் மக்கள் மத்தியில் இடம் பிடித்திருந்தார்.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு “இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி” திரைப்படத்தில் ஒப்பந்தமானார். ஆனால் வடிவேலு படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு தரவில்லை என புகார் எழுந்தது. 


இதனை தொடர்ந்து வடிவேலு படப்பிடிப்பிற்கு சரியாக ஒத்துழைப்பு தராததால் தனக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக இந்த படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.


இப்புகாரின் அடிப்படையில் வடிவேலுக்கு நடிக்க கூடாது என்று ரெட் கார்டு விதிக்கப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த விவகாரம் முடிவுக்கு வந்து, வடிவேலு மீதான ரெட் கார்டு நீக்கப்பட்டது. அதன் பிறகு “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”, “சந்திரமுகி 2”, “மாமன்னன்” போன்ற திரைப்படங்களில் வடிவேலு ஒப்பந்தமானார். இருந்தும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படம் பெரிதாக மக்களை ஈர்க்கவில்லை.


இந்த நிலையில் பிரபல நடிகரும் இயக்குநருமான ஜி.மாரிமுத்து, வடிவேலுவை வைத்து ஒரு படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்ததாக தனது அனுபவத்தை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார். “கத்தி முனையில் கறுப்பு சிங்காரம்” என்ற பெயரில் வடிவேலுக்காக ஒரு கதை எழுதியிருந்தாராம். இந்த கதையை வடிவேலுவிடம் கூறினாராம் மாரிமுத்து.


அதாவது இந்த கதையில் ஒரு வயதான மூதாட்டியும், அவருக்கு பேரனும் இருப்பாராம். அந்த மூதாட்டி, பேரன் ஆகிய இருவருமே வடிவேலுதானாம். அதில் மிக சுவாரஸ்யமான காமெடி காட்சிகளை எழுதியிருந்தாராம் மாரிமுத்து. வடிவேலுவும் இந்த கதையில் நடிப்பதாக ஓகே சொன்னாராம்.


இத்திரைப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்ததாம். ஆனால் வடிவேலுவின் சம்பள பிரச்சனை காரணமாக இத்திரைப்படத்தை உருவாக்க முடியவில்லையாம். மிக அதிகமாக சம்பளம் கேட்டாராம். ஏற்கனவே ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸும் வாங்கியிருந்தாராம். அந்த அட்வான்ஸை ஏ.ஜி.எஸ் நிறுவனம் “தெனாலி ராமன்” திரைப்படத்திற்காக பயன்படுத்திக்கொண்டதாம்.


ஒரு வேளை வடிவேலு இத்திரைப்படத்தில் நடித்திருந்தால், “இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி” படத்தின் வெற்றிக்குப் பிறகு வடிவேலுக்கு மிகப் பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்திருக்கலாம். ஆனால் இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை என்று கூறியிருந்தார்.


Advertisement

Advertisement

Advertisement