2011ஆம் ஆண்டு சாம்பி ரெட்டி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான தேஜா சஜ்ஜா, தற்போது தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களுள் ஒருவராக திகழ்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஹனுமேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து, அவர் நடித்திருக்கும் அடுத்தப் படம் மிராய். ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநராக அறிமுகமாகும் கார்த்திக் கட்டாமானேனி இயக்கியுள்ள இந்த படத்தை, பீபிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து முக்கிய மொழிகளிலும், 2D மற்றும் 3D வடிவங்களில் இந்த படம் வெளியாகவிருக்கிறது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது, மிராய் படத்திற்கு தணிக்கை குழுவினரால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த சயன்ஸ் ஃபிக்ஷன் அடிப்படையிலான ஆக்ஷன் திரில்லரில், தேஜா சஜ்ஜாவுக்கு ரித்திகா நாயக் ஜோடியாக நடிக்க, மனோஜ் மஞ்சு முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மிராய் திரைப்படம், வருகிற செப்டம்பர் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.
Listen News!