• May 18 2024

லியோ ட்ரெய்லரை வெளியிட்ட திரையரங்குகளுக்கு ஏற்பட்ட பிரச்சினை- இது கிரிமினல் அஃபென்ஸா?

stella / 7 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான லியோ. இந்த் திரைப்படம்  அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் அதில் விஜய் கெட்ட வார்த்தை பேசியதாக பல சர்ச்சைகளிலும் சிக்கியது.

ட்ரெய்லர் வெளியான சற்று நேரத்திலேயே ஒரு மில்லியன் பார்வைகளை கடந்து சமூக ஊடகங்களில் டிரெண்டானது. இது ஒருபுறமிருக்க, மற்றொரு பக்கம் ட்ரெய்லரில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை குறித்து ஊடகம் மற்றும் சோஷியல் மீடியாவில் பெரும் விவாதமே எழுந்தது. குழந்தைகள், பெண்கள் என பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை வைத்து இருக்கும் விஜய் பெண்களை அவமதிக்கும் வகையில் இதுபோன்ற கெட்ட வார்த்தையை பேசலாமா எனப் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.


இதற்கு முதல் லியோ படத்தின் முதல் பாடலான நான் ரெடி தான் வரவா பாடலில், புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது சர்ச்சைக்குள்ளானது. உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், இதுபோன்ற காட்சிகளில் நடித்தால் அது, சமூகத்திற்கு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் கண்டித்திருந்தனர்.

இந்நிலையில், லியோ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட திரையரங்குகளுக்கு சென்சார் போர்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், திரையரங்குகளில் திரைப்படத்தையோ, ட்ரெய்லரையோ அல்லது விளம்பரங்களையோ வெளியிடுவதற்கு முன்பு சென்சார் போர்டின் தணிக்கை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றும், லியோ ட்ரெய்லர் தணிக்கை சான்றிதழ் பெற்றிராத நிலையில், எப்படி அதை திரையில் வெளியிட்டீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் தணிக்கை சான்றிதழ் இல்லாமல் ட்ரெய்லரை வெளியிட்டது கிரிமினல் அஃபென்ஸ் என்றும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement