• Apr 27 2024

சூர்யா 42 படத்தின் டைட்டில் இது தானாம்- ரகசியமாக லீக்கான தகவல்- கடும் குழப்பத்தில் படக்குழு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது நடிப்பு திறனால் தனக்கென ஒரு தனி இடத்தினை பிடித்துள்ளார் சூர்யா. இவர் தற்பொழுது சிறுதத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்க 3டி டெக்னாலஜியில் இப்படம் பிரமாண்டமாகத் தயாராகி வருகின்றது.

தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி கதாநாயகியாக நடித்து வருகிறார்.சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் தவிர இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகாத நிலையில், தற்போது டைட்டில் குறித்து தகவல் கிடைத்துள்ளது.


இப்படத்தின் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், தற்போது சூர்யா 42 பட டைட்டில் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன்படி 'வீர்' என்ற டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே சூர்யா 42 படத்தின் டைட்டில் 'வீர்' என்ற செய்தி வைரலாகி வரும் நிலையில், படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை. அத்தோடு சூர்யா 42 3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement