• Mar 13 2026

மலையாள இயக்குநருடன் கூட்டணி வைக்கும் சூர்யா..! காரணம் இது தான்..

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் நடிப்பின் நாயகன் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் "ரெட்ரோ" , வெற்றிமாறன் இயக்கத்தில் "வாடிவாசல் " , பாலாஜி இயக்கத்தில் "சூர்யா 45" போன்ற படங்களில் நடித்து வருகின்றார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகிய "கங்குவா " திரைப்படம் வெளியாகிய முதல் நாளில் ஏற்பட்ட ஒரு சில எதிர்மறையான விமர்சனங்களினால் படம் தோல்வியை சந்தித்தது.


மும்பையில் இவர் சென்றமையினால் தமிழ் ரசிகர்களால் வெறுக்கப்பட்ட நிலையில் தற்போது இவர் மலையாள இயக்குநருடன் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ஜோதிகா மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். குறித்த செட்டில் மலையாள இயக்குநர்களுடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக இவர் ஒத்து கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


அதாவது மலையாள இயக்குநர் பசிலுடன் சூர்யா 47 படத்தினை நடிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றும் மே 1 ஆம் திகதி அஜித்தின் பிறந்தநாள் அன்று சூர்யா நடிக்கும் "ரெட்ரோ" படம் வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement