• May 19 2024

லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதற்கு இது மட்டும் தான் காரணம்- உண்மையை உடைத்த பிரபலம்

stella / 7 months ago

Advertisement

Listen News!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிரூத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படமானது அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீடு செப்டம்பர் 30ந் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது.

இதனால் விஜய் ரசிகர்கள் இதனைக் கொண்டாடி தீர்த்து வந்தனர். ஆனால்  நேற்று இரவு தயாரிப்பு நிறுவனம் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தகவல் அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் சினிமா மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார். 


அதில், லியோ இசைவெளியீட்டு விழா ரத்தானது விஜய் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்து இருக்கலாம். ஆனால், இந்த அறிவிப்பு எனக்கு வேற மாதிரி அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. லியோ ஆடியோ லான்ச் ரத்து என்று தான் படக்குழு வெளியிட்டு இருக்க வேண்டும். ஆனால், ஆடியோ லான்ச் நடத்தப்படவில்லை என்று தான் அறிவிப்பை ஏன் வெளியிட்டது என்று தெரியவில்லை.

நேற்று இரவு 2 மணி வரை நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ இசை வெளியீட்டுக்காக மேடை அமைக்கும் பணி நடந்துக்கொண்டு இருந்தது. இன்னும் சொல்லப்போனால் தயாரிப்பாளர் லலித், உயிர் போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் அந்த இடத்தில் சந்தித்து விஐபிக்கள் வரும் வழி, பார்வையாளர்கள் வரும் வழி, பார்க்கிங் உள்ளிட்டவை குறித்து இதில் ஆலோசனை நடத்தி உள்ளனர்.


லியோ இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்ததற்காக அவர்கள் சொல்லும் காரணம் இன்னும் வேடிக்கையாக இருக்கிறது. நிறைய கூட்டம் வரும், ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அது விஜய்க்கு கெட்டப்பெயராகி விடும் என்றெல்லாம் சொல்கிறார்கள். இந்த காரணத்தை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

நிகழ்ச்சி திடீரென ரத்தானதற்கு பின்னால் நிச்சயமாக அரசியல் அழுத்தம் என்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. ஆனால், உதயநிதி இந்த திட்டத்தில் விஜய்யுடன் மல்லுக்கு நிற்க மாட்டார் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அதே போல ரெட்ஜெயண்ட் நிறுவனமும் இந்த படத்திற்கு எதிரான வேலையில் இறங்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஆனால், இந்த படத்திற்கு அழுத்தம் இருப்பதால், அது திமுக அரசு தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தமாக இருக்கலாம் என்பது என்னுடைய கணிப்பு. என்ன காரணம் என்றால், விஜய் அரசியலுக்கு வருவதாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் இந்த ஆடியோ இசைவெளியீட்டு விழாவை அரசியல் மாநாட்டு விழாவாக பயன்படுத்தப்போகிறார் என்கிற தகவல்கள் வந்ததால் இது நடந்து இருக்கலாம் என்று வலைப்பேச்சு பிஸ்மி அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.


Advertisement

Advertisement