• Nov 01 2024

ஒரே குடும்பத்தில சண்டை, ஒரே டென்சன்ல கோபத்தில தான் இருப்பார்- உண்மையை உடைத்த விஜயகாந்தின் உதவியாளர்

stella / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  150 படங்களில் நடித்து புரட்சிக் கலைஞர் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வந்த நடிகர் தான் விஜயகாந்த்.இவர் நேற்று முன் தினம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு உச்சக்கட்ட சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அவரது உடல் நேற்று மாலை கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சூழலில் அவருடனான நினைவுகள் குறித்து பல பிரபலங்கள் பகிர்ந்துவருகின்றனர். 


 அவர் மறைவுக்கு பின்னர்தான் அவர் செய்த பல உதவிகள் குறித்த தகவல்களும் வெளியாகி வருகின்றன.இந்த நிலையில் விஜயகாந்தின் உதவியாளராக இருந்த  ராஜேந்திரன் இப்போது விஜயகாந்தை பற்றி பல சுவாரஸ்யமான சம்பவங்களைக் கூறியுள்ளார்.

அதாவது விஜயகாந்த் அமாவசை அன்று மட்டும்தான் அசைவ உணவுகளை சாப்பிட மாட்டாராம். மற்ற நாள்களில் மீன்களைத்தான் அதிகம் உண்பாராம். அதுவும் விலாங்கு மீன் என்றால் விஜயகாந்துக்கு மிகவும் பிடிக்குமாம்.


எங்கு படப்பிடிப்பிற்கு போனாலும் தன் உதவியாளர்களை போகச் சொல்லி விலாங்குமீனை வாங்கி வரச் சொல்லுவாராம். அதுவும் ஒருகிலோ இரண்டு கிலோ எல்லாம் இல்லையாம். 15 லிருந்து 20 கிலோ வரை வாங்கச் சொல்வாராம். ஏனெனில் யுனிட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் தான் சாப்பிடுவதைத்தான் கொடுக்க சொல்வாராம்.

மேலும் படப்பிடிப்பு நாள்களில் மிகவும் டென்ஷனாகத்தான் இருப்பாராம். மனைவியுடன் சண்டை , பங்காளியுடன் சண்டை, ஊர் பஞ்சாயத்து என மற்றவர்களது எல்லா டென்ஷகளையும் தனது தலையில் ஏற்றி வைத்துக் கொள்வாராம். இதில் அரசியல் சார்ந்த பிரச்சினைகளும் சூழ்ந்து வர சில சமயங்களில் கோபத்தில் கத்த இல்லை என்றால் அடித்தும் விடுவாராம். ஆனால் அடித்துவிட்டு அதன் பின் வருந்தி மன்னிப்பு கேட்பாராம் விஜயகாந்த் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement