• Apr 27 2024

பிக்பாஸ் அழகிகள் இருவருமே அட் இல் இப்படி அசத்துறாங்களே... வைரலாகும் வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியினை 6ஆவது சீசனானது அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கி இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் என்றுமே இல்லாத அளவிற்கு 21 போட்டியாளர்களை களமிறக்கி இருந்தனர். 


இந்த சீசனிலும், 3ஆவது சீசனில் லாஸ்லியாவை இறக்கியது போல இலங்கையிலிருந்து ஜனனி என்பவரை களமிறக்கி இருந்தனர். இவர் நிகழ்ச்சிக்குள் நுழைந்ததில் இருந்து பல இன்றுவரை பல ஆர்மிகள் இவருக்காக செயல்பட்டு வருகிறது.

இவர் கியூட்டான பேச்சு, சிரிப்பு மற்றும் கலகலப்பு என எல்லோரையும் தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார். இவரைப் போலவே பிக்பாஸ் வீட்டில் அழகுக்கு பஞ்சமில்லாத இன்னொருவர் என்றால் அது குயின்ஷி தான். இவரின் அழகில் மயங்கியும் இவருக்காக பல ரசிகர்கள் உருவாகத் தொடங்கி இருக்கின்றனர்.


பல இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்ட இவர்கள் இருவரினதும் கியூட்டான புகைப்படங்கள், மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் இணைந்து பிக்பாஸ் வீட்டிற்குள் விளம்பரம் ஒன்றினை நடித்துக் காட்டி இருக்கின்றனர். 

அதில் அவர்கள் இருவருமே ரொம்பவே அழகாக இருக்கின்றார்கள். அதனைப் பார்த்த ரசிகர்கள் அந்த வீடியோவினை வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement