• May 18 2024

நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு ஊர்சுத்தும் நடிகர் அருண்-வைரலாகும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் சேர்ந்து நடிப்பவர்கள் பலரும் நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேர்ந்திருக்கின்றார்கள். இவர்களைப் போன்றே சின்னத்திரையில் வலம் வருகின்ற நடிகர் நடிகைகள் பலரும் ஜோடி சேர்ந்த வண்ணமே உள்ளனர். இதற்கு எடுத்துக் காட்டாக விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து வந்த ஆல்யா-மானசா ரியல் வாழ்க்கையிலும் ஜோடி சேர்ந்திருப்பதை குறிப்பிட்டுக் கூற முடியும்.

இவர்களை போன்றே தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ராஜா ராணி 2’ என்ற சீரியலில், கதாநாயகியை விட வில்லியின் நடிப்புத் தான் அமோகமாக இருக்கின்றது என்ற பாராட்டை வாங்கிய அர்ச்சனாவுக்கும், அதே தொலைக்காட்சியில் ‘பாரதிகண்ணம்மா’ என்ற சீரியலில் கதாநாயகனாக டாக்டர் பாரதி என்ற கதாபாத்திரத்தில் எதார்த்தமாக தனது நடிப்பினை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நடிகர் அருண்பிரசாத்திற்க்கும் விரைவில் திருமணம் ஆகப் போகிறது என சமீபத்தில் ஒரு சில தகவல் வெளியாகி இருந்தன.

எனினும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தொடர்பான சந்தேகம் பலரின் மனதில் இருந்தது. ஆனால் இவர்கள் இருவருமோ சைலண்டாக தங்களது நிச்சயதார்த்தத்தினை நடாத்தி இருக்கின்றனர் என தகவல் வெளியாகி உள்ள நிலையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது இவர்கள் இருவருடனும் குக்வித்கோமாளி ரித்திகாவும் இருக்கின்றார்.இதைப் பார்த்த ரசிகர்கள் அட இருவரும் நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு ஊர் சுத்த ஆரம்பித்து விட்டார்களா என கேட்டு வருகின்றனர்.இதோ அந்த வீடியோ…

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement