• May 18 2024

சூர்யா 42’ படம் பற்றி தயாரிப்பாளர் வெளியிட்ட சூப்பர் அப்டேட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி இன்று பால்லாயிரக்கணக்காக மக்கள் மனங்களில் குடியிருக்கின்ற ஒரு வெற்றி நாயகனே நடிகர் சூர்யா. சமீபகாலமாக இவரின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாக பெரியளவில் சாதனை படைத்து வருவதோடு சூப்பர் ஹிட் வெற்றியினையும் பெற்று வருகின்றன.

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள சூர்யா 42 படத்தின் பூஜை இன்று காலை 7 மணிக்கு சென்னையில் நடைபெற்றது

மேலும் இந்த பூஜையில் சூர்யா, சிறுத்தை சிவா,  தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர் 

இருப்பினும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பதும், பூஜை குறித்த புகைப்படங்கள் கூட வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் இது குறித்து பேட்டி அளித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் அடுத்த வாரம் வெளியாகிறது என்றும் கூறினார்.

மேலும் இது ஒரு பான் இந்தியா திரைப்படம் வேண்டும் தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் ,ஒரியா ,மராத்தி இந்தி உள்பட மொத்தம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார் 

இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த முழு தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement

Advertisement