• Apr 27 2024

வாரிசு படத்தில் நடித்த நடிகர்களுக்கு பல கோடிகளை அள்ளிக் குவித்த தயாரிப்பாளர்...வெளியானது முழு விபரம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11ம் தேதி ரிலீஸாக உள்ளது. அதேநாளில் அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியாகவுள்ளதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. பொங்கல் ரேஸில் விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு இரண்டில் எது மாஸ் காட்டும் என பெரிய விவாதமே நடைபெற்று வருகிறது.அத்தோடு ஃபேமிலி என்டர்டெயின்மெண்ட் ஜானரில் உருவாகியுள்ள வாரிசு, நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்றே கூறப்படுகின்றது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள வாரிசு படத்தை வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ளார், தில் ராஜூ தயாரித்துள்ளார்.அத்தோடு இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் 200 கோடி ரூபாய் என கூறப்படுகின்றது. மேலும் இதில் விஜய்க்கு மட்டுமே 110 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதேபோல் ராஷ்மிகா மந்தனாவுக்கு 4 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இவர்கள் இருவரையும் தவிர மற்ற நடிகர்கள், நடிகைகளின் சம்பள விவரங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வாரிசு படத்தில் விஜய்யின் அப்பா கேரக்டரில் சரத்குமார் நடித்துள்ளார். முதன்முறையாக விஜய்யுடன் சரத்குமார் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. வாரிசு ட்ரெய்லரிலேயே சரத்குமாரின் கேரக்டர் பற்றி லீட் இருந்தது. இந்நிலையில் இந்தப் படத்திற்காக சரத்குமார் 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம். இன்னொரு முக்கியமான கேரக்டரில் பிரபு நடித்துள்ளார். ஆனால், அவரது கேரக்டர் பற்றிய தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் அவருக்கும் 2 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்தோடு வாரிசு படத்தில் பிரகாஷ்ராஜ் வில்லனாக நடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே இதனை பிரகாஷ் உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. கில்லி, சிவகாசி படங்களுக்குப் பிறகு விஜய் - பிரகாஷ்ராஜ் கூட்டணி தெறிக்கவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வாரிசு படத்தில் நடித்ததற்காக பிரகாஷ் ராஜுக்கு 1.5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம்.

அதேபோல் வாரிசு படத்தில் விஜய்யின் அண்ணனாக நடித்துள்ள ஷாம் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஷாமிற்கு கம்பேக் கொடுக்கும் படமாக் வாரிசு இருக்கும் என எதிர்பார்கப்படுகிறது. மேலும் விஜய்க்கு இன்னொரு அண்ணனாக தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார்.

மேலும்  அவருக்கு 60 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் குஷ்பூவுக்கு 40 லட்சமும் யோகி பாபுவுக்கு 35 லட்சமும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாம். விஜய்யின் அம்மாவாக நடித்துள்ள ஜெயசுதாவுக்கு 30 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுதவிர இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்டவர்களின் சம்பளமும் கோடிகளில் வழங்கப்பட்டுள்ளதாம். எனினும் அதன்படி பார்த்தால் படத்தின் பட்ஜெட்டில் பாதி சம்பளமாகவே போயிருக்குமே என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement