• Feb 05 2025

On the way_ல தான் பிரச்சினை வரும்..! வெளியானது 'நேசிப்பாயா' டிரைலர்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

ஆகாஷ் முரளி - அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் நேசிப்பாயா. இந்த படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் ஆதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி கதாநாயகனாக களம் இறங்கி உள்ளதோடு இந்த படத்தில் அதீதி சங்கரும் அவருக்கு ஜோடியாக இணைத்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் சரத்குமார், குஷ்பூ, ராஜா, பிரபு மற்றும் பலர்  நடித்துள்ளார்கள். இந்த படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


இந்த நிலையில், ரொமான்டிக் காதல், ஆக்சன் நிறைந்த கதைக்  களத்தில் உருவாகிய நேசிப்பாயா படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

அதில் ஆகாஷ் முரளி - அதிதி ஷங்கரின் காதலையும் தாண்டி சரத்குமார், குஷ்பூவின் என்ட்ரியும் அதிரடியாக காணப்படுகிறது. தற்போது குறித்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றமை குறிப்பிட்டதக்கது.

Advertisement

Advertisement