• Sep 16 2025

இம்முறை ஒன்றா.? இரண்டா.? பிக்பாஸ் ஹவுஸ்ஸ கதற விடப் போறாங்களே..

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

2017 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ் நிகழ்ச்சி.  இந்த நிகழ்ச்சி  இளைஞர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல்  வயதானவர்கள் கூட விரும்பிப் பார்க்கும் வகையில் அமைந்துள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ஏழு சீசன்களையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார். அதன் பின்பு எட்டாவது சீசனில் அவர் விலகவே,  அவருக்கு பதில் யார் என்ற கேள்வி எழுந்தது .  இறுதியில் விஜய் சேதுபதி அதற்கு தெரிவானார்.  

இதைத்தொடர்ந்து  பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரங்களில் தான் சொல்ல வேண்டியவற்றை அதிக நேரம் எடுக்காமல்  சட்டென்று சொல்லி முடித்து ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும்  ஈர்த்தார். இந்த முறையும்  விஜய் சேதுபதி தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார். 


மேலும்  18 போட்டியாளர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி  மொத்தமாக 105 நாட்களைக் கொண்டு அமையப் போக உள்ளதாம்.  எனினும் இதில்  பங்கு பற்றியுள்ள போட்டியாளர்கள் பற்றிய அதிகார்வபூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. 

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன்  ஒரு ஹவுஸில் தான் இடம்பெற உள்ளதாக தற்போது தகவல் வெளியாக உள்ளது. 

அதாவது கடந்த இரண்டு சீசன்களுமே ஒரு வீட்டை இரண்டாகப் பிரித்து அதில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு  நடத்தப்பட்டது. ஆனால் இம்முறை பிக்பாஸ் ஹவுஸ் ஒன்றென கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 



 

Advertisement

Advertisement