• Sep 22 2023

காலேஜ்ஜிற்கு படிக்கப் போக முடிவெடுத்த பாக்கியா... ஷாக்கில் இனியா... கோபிக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி.. சூப்பரான ப்ரோமோ வீடியோ..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் சீரியலான பாக்கியலட்சுமி சீரியலானது அதிரடித் திருப்பங்களுடன் அட்டகாசமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


அதில் பாக்கியா லோன் கேட்டு பாங்க் ஒன்றிற்கு செல்கின்றார். அங்கு சென்று சுயதொழில் தொடங்குவதற்குத் தனக்கு லோன் வேணும் எனக் கேட்கின்றார். பாக்கியாவின் டாக்குமெண்ட்ஸை வாங்கிப் பார்த்த மானேஜர் டிகிரி சான்றிதழ் வேண்டும் எனவும், படித்து முடித்த பெண்களுக்கு தான் தாங்கள் லோன் கொடுப்பதாகவும் கூறுகின்றார். 


இதனையடுத்து வீட்டிற்கு சென்ற பாக்கியா ராத்திரி நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த இனியாவை எழுப்பித் தான் காலேஜ்ஜிற்கு வந்தால் எப்பிடி இருக்கும் என்று கேட்கின்றார். அதற்கு இனியா "படிக்கிறேன்னு மட்டும் வந்திடாதேம்மா" எனக் கூறுகின்றார். பதிலுக்கு பாக்கியா "எந்த வயசில் வேணும் என்றாலும் படிக்கலாம் என்று எல்லாரும் சொல்லுறாங்க" என்கிறார்.


அதுக்காக இப்ப வருவியா என இனியா கேட்கின்றார். அதற்கு பாக்கியாவும் ஆம் எனத் தலையாட்டுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் கோபிக்கு அடுத்த ஆப்பு ரெடி எனக் கூறி வருகின்றனர். 


Advertisement

Advertisement

Advertisement