• Dec 04 2024

நாமினேஷன் லிஸ்டில் இறுதியாக சிக்கிய நால்வர்.. விஜய் சேதுபதி அதிரடியாக கொடுத்த டாஸ்க்

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்களை கடந்துள்ளது. இந்த வாரம் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் எபிசோடுகள் இடம்பெறுவதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு அதனை பார்த்து வருகின்றார்கள்.

இந்த சீசனின் ஆரம்பத்தில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, தர்ஷா குப்தா, சத்யா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.

இதை தொடர்ந்து ஆறு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவகுமார்  ஆகிய ஆறு பேரும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள். எனினும் இதில் ரவீந்தர், அர்ணவ், தர்ஷா குப்தா, ரியா, வர்ஷினி ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர்.

d_i_a

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் பொம்மை டாஸ்க் ஒன்று கொடுத்து அதில் எலிமினேட் ஆகப்போகும்  போட்டியாளர் யார் என சஸ்பென்ஸ் ஆக சொல்லியுள்ளனர்.


அதாவது நாமினேஷன் லிஸ்டில் உள்ள ஆனந்தி, சாச்சனா, சிவக்குமார் மற்றும் ரஞ்சித் ஆகியோரை போட்டியாளர்களுக்கு  நடுவில் உட்கார சொன்ன பிக் பாஸ் தலைவர், அதன் பின்பு அவர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கின்றார்.

அதில் பந்துகள் கொட்டப்பட்ட ஒரு பெட்டில் பொம்மைகள் உள்ளது. அதில் உங்களுடைய பெயர் இருந்தா நீங்க சேப்.. அப்படி இல்லாத போட்டியாளர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறப்படுகிறது. அதில் பெயருள்ள பொம்மைகளை தேடி எடுக்கின்றார்கள். இவ்வாறு ஒரு டாஸ்கை கொடுத்து எலிமினேஷன் நடத்துகின்றார்கள்.

இதேவேளை, பிக் பாஸில் இறுதியாக எலிமினிட் ஆனது சிவகுமார் என்ற செய்தி ஏற்கனவே இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement