• May 18 2024

கொண்டாட்டத்தில் இறங்கிய எதிர்நீச்சல் சீரியல் குழுவினர்- இது தான் விஷயமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திருச்செல்வம் அவர்கள் இயக்கத்தில் சன், கலைஞர், ஜெயா என பல தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்பாகி உள்ளது.

அதில் ஹிட்டான சீரியல்கள் என்றால் மெட்டி ஒலி, கோலங்கள், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, இப்போது எதிர்நீச்சல் என வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது.

அதிலும் தற்போது ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர் பட்டிதொட்டி எங்கும் கலக்குகிறது, அதில் ஆணாதிக்கத்தால் கஷ்டப்படும் பெண்கள் பலரும் தொடருக்கு பெரிய ஆதரவு கொடுக்கிறார்கள்.

எனினும் தற்போது சீரியல் குழுவினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

ஏன் என்றால் இயக்குநர் திருச்செல்வம் அவர்கள் சினிமாவில் நுழைந்து 20 வருடங்கள் ஆகிவிட்டனவாம். இதனால் சீரியல் குழுவிநர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சோசியல் மீடியாவில்  வலம் வந்துகொண்டிருக்கிறது.



Advertisement

Advertisement