• Jan 19 2025

த்ரிஷா மட்டுமல்ல.. பல நடிகைகள் கூவத்தூருக்கு போனது உண்மைதான்: தமிழா தமிழா பாண்டியன்

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நடிகை த்ரிஷா கூவத்தூருக்கு சென்றதாகவும் அங்கு முன்னாள் அதிமுக எம்எல்ஏக்களுக்கு விருந்தாக்கப்பட்டதாகவும் ஏவி ராஜு என்பவர் சர்ச்சைக்குரிய தகவலை கூறிய நிலையில் அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன என்பதும் இதையடுத்து அவர் த்ரிஷாவிடன் அவர் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து பல பிரபலங்கள் இதுகுறித்து பேசி வருகின்றனர் என்பதும் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் இருக்கும் பயில்வான் ரங்கநாதன், தமிழா தமிழா பாண்டியன் உள்ளிட்ட பலர் யூடியூப் சேனல்களுக்கு இது குறித்து பேட்டி அளித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் தமிழா தமிழா பாண்டியன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த போது கூவத்தூருக்கு த்ரிஷா சென்றது உண்மைதான் என்றும் அவர் மட்டுமல்ல தமிழ் திரை உலகில் உள்ள பல நடிகைகள், சின்னத்திரை நடிகைகளும் சென்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வராக வேண்டும் என்பதற்காக 122 எம்எல்ஏக்களை கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைத்திருந்தார் என்றும் அப்போது அவர்களுக்கு மது மற்றும் மாமிச உணவுகள் வழங்கப்பட்டதாகவும் அதன் பின்னர் அவர்களை மகிழ்விக்க நடிகைகளும் வரவழைக்கப்பட்டார்கள் என்றும் இது உண்மைதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் இதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்றும் இதெல்லாம் ரகசியமாக நடந்ததாக கூறப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மூத்த பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் சிறிதும் ஆதாரம் இல்லாத ஒரு தகவலை பொதுவெளியில் பரப்பி வருவது மோசமான செயல் என்று தமிழா தமிழா பாண்டியனுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement