விஜய் மீது திடீரென பொதுமக்கள் புகார் அளித்த நிலையில் விஜய் தனது சுய விளம்பரத்தை அதிரடியாக நிறுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவருடைய அரசியல் கட்சியை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியில் அவர் தீவிரமாக இருக்கிறார் என்பதும் அதனால் அவர் சில சுய விளம்பரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக சமீபத்தில் பாண்டிச்சேரியில் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் தான் படப்பிடிப்பில் இருக்கும் இடத்தை கூறி, அங்கு ரசிகர்களோடு வரவேண்டும் என்று ரகசிய உத்தரவு பிறப்பித்ததாகவும், இதன் காரணமாக தான் ’கோட்’ படப்பிடிப்பின் போது ரசிகர்கள் குவிந்ததாகவும் தெரிகிறது.
இதை பயன்படுத்தி ரசிகர்களுடன் செல்பி எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த விஜய் பரபரப்பை ஏற்படுத்தினார். விஜய் கட்சி ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே அவருடைய கட்சிக்கு ஆதரவு குவிந்து வருவதாக ஒரு பில்டப்பை காட்டுவதற்காக இதை அவர் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தினந்தோறும் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை வரவழைத்து பில்டப் செய்ய விஜய் நினைத்திருந்த நிலையில், அந்த பகுதியில் விஜய் ரசிகர்கள் கூடியதால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடி பொதுமக்களுக்கு பெரும் இடைஞ்சல் ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சிலர் சமூக வலைதளங்களில் புகார் செய்ததாகவும் ஒரு சிலர் காவல்துறையில் புகார் அளிக்கப் போவதாகவும் கூறினர். புதுவை அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தயாரான போதுதான், இந்த பிரச்சனை நெகட்டிவாக மாற வாய்ப்பு இருப்பதாக கருதிய விஜய், உடனே தனது சுய விளம்பரத்தை நிறுத்திக் கொண்டு ரசிகர்கள் இனி பாண்டிச்சேரிக்கு வர வேண்டாம் என கூறியதாகவும் கூறப்படுகிறது.
விஜய் இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நிலையில் அவருடைய ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்துக்கு வந்தது நெய்வேலியில் மட்டும் தான். ஆனால் இதை தொடர்கதையாக்கி விளம்பரம் தேடிக் கொள்ள விஜய் நினைத்த நிலையில் அவருக்கே அது ஆப்பு வைக்கப்பட்டதாக கூறப்பட்டு வருகிறது.
Listen News!