• Jul 27 2024

கமல்ஹாசனுக்கு ஆரம்பிக்கலாமா.. ரஜினிக்கு முடிச்சிடலாமா.. ‘தலைவர் 171’ டைட்டில் வீடியோ..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படத்தின் டைட்டில் வீடியோவுக்கு ’ஆரம்பிக்கலாமா’ என்ற வசனம் இடம் பெற்று இருந்த நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தலைவர் 171’ படத்தின் வீடியோவுக்கு ’முடிச்சிடலாமா’ என்ற வசனத்தை லோகேஷ் கனகராஜ் எழுதி வைத்துள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ’தலைவர் 171’.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று மாலை இந்த படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சற்று முன் இந்த வீடியோ வெளியான நிலையில் இந்த வீடியோவில் ரஜினியின் அதிரடி ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

மேலும் இந்த படத்திற்கு ’கூலி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வசனம் மற்றும் அனிருத்தின் பின்னணி இசை ரசிக்க வைக்க அளவுக்கு உள்ள நிலையில் ஆரம்பத்திலேயே இந்த படத்தை மிகப்பெரிய எதிர்பார்ப்பை லோகேஷ் கனகராஜ் ஏற்படுத்தி விட்டார் என்று கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.




Advertisement

Advertisement