• Jan 19 2025

ஒரு மணி நேரத்தில் ஒரு கோடி சம்பாதித்த பிரபல நடிகர் மகள்.. ஒரே நிமிடத்தில் செலவு செய்து அதிர்ச்சி..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

ஒரு மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்த பிரபல நடிகரின் மகள் அந்த ஒரு கோடி ரூபாய் பணத்தை ஒரே நிமிடத்தில் செலவு செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ்பாபுவிற்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கும் நிலையில் மகள் சித்தாராவுக்கு தற்போது 12 வயது ஆகிறது என்பதும் அவர் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிப்பின் மீது அவருக்கு இந்த வயதிலேயே ஆர்வம் இருக்கும் நிலையில் அவரை ஒரு ஆடை ஏற்றுமதி நிறுவனம் விளம்பர படத்தில் நடிக்க அணுகியது. அதற்காக அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாகவும் தந்தையிடம் அனுமதி வாங்கி அந்த விளம்பர படத்தில் சித்தாரா நடித்ததாகவும் கூறப்பட்டது.



அந்த விளம்பர படத்தில் அவர் ஒரு மணி நேரம் மட்டுமே நடித்த நிலையில், நடித்து முடித்த அடுத்த நிமிடமே அவருக்கு சம்பள பணம் வழங்கப்பட்டதாகவும் அந்த சம்பள பணத்தை வாங்கிய சித்தாரா அதை அடுத்த நிமிடமே தனக்கு தெரிந்த தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஒரு மணி நேரம் விளம்பர படத்தில் நடித்து, அதிலிருந்து கிடைத்த ஒரு கோடி ரூபாய் பணத்தை ஒரே நிமிடத்தில் தானமாக கொடுத்துவிட்டதை அறிந்த மகேஷ் பாபு ரசிகர்கள் இந்த சின்ன வயதிலேயே அவருக்கு இருக்கும் தாராள மனதை பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement