அஸ்வத் மாரிமுத்து - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் தான் டிராகன். இந்த படம் நாளை ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழில் வெளியான லவ் டுடே படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர்தான் பிரதீப் ரங்கநாதன். இந்த படம் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. இதற்கு முதல் ஏற்கனவே அவர் கோமாளி படத்தில் இயக்குனராக அறிமுகமானார். அந்தப் படமும் மாபெரும் வெற்றி பெற்றது.
d_i_a
இதைத்தொடர்ந்து அஸ்வின் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் டிராகன் படத்தில் நடித்துள்ளார். அதில் பிரதீபுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர் ஆகிய ஹீரோயின்கள் நடித்துள்ளார்கள்.
சுமார் 37 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு முன்பதிவு மிக வேகமாக நடைபெற்று வருகின்றது. அத்துடன் தற்போது வரையில் ட்ராகன் திரைப்படம் ஒரு கோடிக்கு மேல் முன்பதிவில் வசூலித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், டிராகன் படத்தை பார்த்த சிலம்பரசன் அது தொடர்பான விமர்சனத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது சிம்பு அளித்த விமர்சனம் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
அதன்படி டிராகன் படம் 'பிளாக் பாஸ்டர்' என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு சிம்பு ஒற்றை வரியில் டிராகன் படத்தின் விமர்சனத்தை பதிவிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க வைத்துள்ளார்.
Listen News!