• Sep 11 2025

மம்முட்டிக்கு திடீரென என்னாச்சு? உடல் நலம் பற்றி தீயாய் பரவும் தகவல்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் மெகா ஸ்டார் என பலராலும் கொண்டாடப்படுபவர் மம்முட்டி.  இவர் பலர் தலைமுறைகளைக் கடந்து சிறந்த நடிகராக வலம் வருகின்றார்.  மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ்  சினிமாவிலும்  பிரபலமாக காணப்படுகின்றார். 

கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தில் பிரம்மாண்டமாக நடித்து இருந்தார். இந்த படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் மம்முட்டி வென்றிருந்தார்.  அதே ஆண்டு ஜோதிகாவுடன் இணைந்து காதல் தி கோர் என்ற படமும்  நல்ல வரவேற்பு பெற்றது. 

தமிழ் சினிமாவில் மௌனம் சம்மதம் என்ற படத்தில் அறிமுகமான மம்முட்டி அதன் பின்பு அழகன், தளபதி ,மக்கள் ஆட்சி, புதையல், மறுமலர்ச்சி கிளி பேச்சு கேட்கவா  போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இறுதியாக இவருடைய நடிப்பில் பேரன்பு படம் வெளியானது. 


கடந்த சில நாட்களாகவே மம்முட்டியின் உடல்நலம் பற்றி  பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில்  உலா வருகின்றன. அதில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் நடிப்பில் இருந்து பிரேக் எடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. 

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நடிகர் மம்முட்டி பூரண குணம் அடைந்துள்ளார் என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.  இதற்கு திரைப் பிரபலங்கள் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement