• Apr 27 2024

ரிகர்சலில் கூட சிங்கிள் டேக்தான்- ட்ரெண்டாகும் ரஞ்சிதமே ரஞ்சிதமே மேக்கிங் வீடியோ- தளபதியின் அனல் பறக்கும் டான்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்யின் வாரிசு திரைப்படம் அதிக எதிர்பார்ப்புடன் கடந்த மாதம் 11ம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படத்தை வம்ஷி பைடிப்பள்ளி இயக்கியிருந்தார், தில் ராஜூ தயாரித்திருந்தார். 

விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, முக்கியமான பாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். முதல் நாளில் இருந்தே நல்ல ஓபனிங் கிடைத்த வாரிசு திரைப்படம் இதுவரை ரூ.300 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.


வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். அவரது இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகின. முக்கியமாக ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியான ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலுக்கு தியேட்டரில் ரசிகர்கள் ஆட்டம் போட்டு கொண்டாடி தீர்த்தனர். இந்தப் பாடலின் இறுதியில் சிங்கிள் ஷாட்டில் கட்டே இல்லாமல் ஸ்பீடாக ஆடி அசத்தியிருந்தார் விஜய்.


இந்நிலையில், ரஞ்சிதமே பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.முக்கியமாக கடைசியாக வரும் அந்த சிங்கிள் ஷாட் நடனத்தை விஜய் ரிகர்சல் செய்கிறார். இந்த ரிகர்சலில் கூட விஜய் பிரேக் விடாமல் சிங்கிள் ஷாட்டில் ஆடுவது ரசிகர்களிடம் ட்ரெண்டாகி வருகிறது. ஜானி மாஸ்டருக்கும் ராஷ்மிகாவுக்கும் நடுவில் விஜய் அசத்தலாக ஆடும் இந்த மேக்கிங் வீடியோவை ரசிகர்களும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement