நடிகை கீர்த்தி சுரேஷ் சிலம்பம் கற்று வருவதாக கூறப்படுவதை அடுத்து சிம்புவின் அடுத்த படத்தின் நாயகி இவர் தான் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிம்பு நடிக்க இருக்கும் 48வது திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு தயாராகுவதற்கு வெளிநாடு சென்று திரும்பி உள்ள சிம்பு விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் நாயகியாக நடிக்க தீபிகா படுகோன், மிருணாள் தாக்கூர் உள்ளிட்டவர்களிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் இந்த படத்தின் நாயகியாக நடிக்க இருப்பதாக தெரிகிறது.
இந்த படத்தின் நாயகியாக நடிக்க தீபிகா படுகோன், மிருணாள் தாக்கூர் உள்ளிட்டவர்களிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் இந்த படத்தின் நாயகியாக நடிக்க இருப்பதாக தெரிகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் மாஸ் நடிகரின் படத்தில் நடிப்பதற்காக தான் சிலம்பு கற்று வருவதாக கூறியுள்ளார். சிம்பு 48 படத்தின் ஹீரோயின் ஒரு சிலம்ப சண்டை வீராங்கனை என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது அவர் ’சிம்பு 48’ படத்தின் ஹீரோயின் இவர் தான் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு இசையமைக்க தேவிஸ்ரீ பிரசாத் இடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் இன்னொரு நாயகி நடிக்க இருப்பதாகவும் அவரது தகவல் வெளியாகும் போது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
Listen News!